நடிகை தமன்னா மீது காலணி வீசிய பொறியாளர் கைது!

365

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணியாக திகழும் நடிகை தமன்னா மீது, இளைஞர் ஒருவர் காலணி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்தில் உள்ள ஹிம்யாத் நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நகைக்கடை ஒன்றை நடிகை தமன்னா நேற்று திறந்து வைத்தார். பின்னர் கடையில் இருந்து வெளியே வந்த அவர், ரசிகர்களை நோக்கி கை அசைத்தார். அப்போது, கூட்டத்தில் இருந்த ஒருவர் திடீரென நடிகை தமன்னா மீது காலணி வீசி உள்ளார். ஆனால், அருகில் நின்று கொண்டிருந்த கடை ஊழியர் மீது காலணி விழுந்துள்ளது. இதனையடுத்து அங்கிருந்த போலீசார் இளைஞரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் பெயர் கரிமுல்லா என்றும், முசீராபாத்தை சேர்ந்த பொறியாளர் என்பதும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ice_screenshot_20180129-073302