கானா பாடி போலீசாருக்கு மிரட்டல் விடுத்த ரவுடி ஆனந்தின் கூட்டாளிகள் கைது..!

288

என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி ஆனந்தனின் நினைவு நாள் விழாவில் காவல்துறைக்கு எதிராக பாடல் பாடி டிக்டாக்கில் வெளியிட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். பிரபல ரவுடியான இவர் கடந்த ஆண்டு ஜூலை 2-ம் தேதி வழக்கு ஒன்றை விசாரிக்க வந்த போலீசாரை தாக்கியுள்ளார் . இதில் காயமடைந்த காவலர் ராஜவேலு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, சென்னை மத்ய கைலாஷ் அருகே பதுங்கியிருந்த ஆனந்தனை பிடிக்கும் முயற்சியில் ஆனந்தன் போலீஸாரால் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.இந்நிலையில், ஆனந்தனின் முதலாமாண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி கடந்த 3-ம் தேதி நடைபெற்றது. அங்கு நடந்த கானா கச்சேரியில் காவல் துறைக்கு எதிராகவும், போலீசாரை விமர்சித்தும் பாடல்களை பாடி டிக்டாக் வெளியிட்டுள்ளனர். இதனை அறிந்த போலீசார் கானா பாடகர்
மணிகண்டன், மற்றும் சுரேஷ்குமார், விஜய், கார்திக், பிரசாத், சமீர் பாஷா ஆகியோரை கைது செய்துள்ளனர்.