காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் என்கவுண்டர்..!

99

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டம் சோபோர் பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற பாதுகாப்பு படையினர் அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி சரமாரியாக சுடத் தொடங்கினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டனர்.
இந்த தாக்குதலில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.