பாதுகாப்பு படையினர் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில், 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!

124

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில், 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டம் கிலூரா எனும் பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் அங்கு சென்ற பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை சுற்றி வளைத்தனர். அப்போது பாதுகாப்பு படையினரை நோக்கி பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இரவு முழுவதும் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகள் 5 பேர் உயிரிழந்தனர். இதனால் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முறியடிக்கப்பட்டது. இருப்பினும் அப்பகுதியில் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நீடித்து வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.