பிரபல முற்போக்கு எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் …!

230

பிரபல முற்போக்கு எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரபல முற்போக்கு எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு வயது 66. விருநகர் மாவட்டம், மேலாண்மைறைநாடு கிராமத்தில் பிறந்த பொன்னுசாமி, வறுமையின் காரணமாக 5-ம் வகுப்பு மட்மே படித்தார். இலக்கிய நூல்களை படித்த இவர், இடதுசாரி இலக்கிய அமைப்புகளுடன் ஏற்பட்ட தொடர்பால் எழுதத் தொடங்கினார். 1972-ல் முதன் முதலில் செம்மலர் இதழில் பரிசு என்ற சிறுகதையை எழுதினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தில் முக்கிய பொறுப்பு வகித்த பொன்னுசாமி. 36 புத்தகங்களை எழுதியுள்ளார். மின்சாரப்பூ என்ற சிறுகதை தொகுப்பு நூல் 2007-ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது. எழுத்தாளர் பொன்னுசாமியின் மறைவிற்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். எழுத்தாளர் பொன்னுசாமியின் கண்கள் அவரது விருப்பப்படி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.