யானோமாமி இன மக்களின் வினோத பாரம்பரிய முறை | இறந்தவர்களின் எலும்புகளை சமைத்து சாப்பிடும் பழக்கம்.

109

இறந்தவர்களின் எலும்புகளை சமைத்து சாப்பிடும் யானோமாமி இன மக்களின் பாரம்பரிய முறை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசில் மற்றும் வெனிசுலா நாட்டில், யானோமாமி என்ற இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தங்களது இன மக்கள் இறந்துவிட்டால், அவர்களின் உடலை எரித்துவிட்டு, சாம்பல் மற்றும் எலும்புகளுடன் காய்கறிகள் சேர்ந்து சூப் வைத்து குடிக்கிறார்கள். இவ்வாறு செய்வதால், இறந்தவர்கள் தங்களுடன் வாழ்ந்து வருகிறார்கள் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. உயிரிழந்தவர்களின் உடலை எரித்து பெறப்பட்ட சாம்பலை கடலில் கரைக்கும் முறையே இன்றளவும் உலகின் பெரும்பகுதி மக்களால் பின்பற்றப்படும் நிலையில், யானோமாமி இன மக்கள் பின்பற்றும் இந்த வினோத முறை பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.