விவசாய நிலத்தில் புகுந்த காட்டு யானை

கொடைக்கானல் அருகே விவசாய நிலத்தில் புகுந்த யானை மரத்தில் உள்ள பழங்களை பறித்துச்செல்லும் காட்சி வெளியாகியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் அஞ்சு வீடு, தாண்டிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் யானைக்கூட்டங்கள் விவசாய நிலத்தில் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருகிறது. இது விவசாயிகளுக்கு மிகுந்த அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இந்நிலையில் குப்பம்மாள் பட்டி கிராமத்தின் விளை நிலத்தில் புகுந்த யானை, அங்குள்ள மரத்தில் இருந்து பழங்களை பறித்து அவற்றை உண்பதற்காக எடுத்துச் செல்கின்றன. இந்தக் காட்சிகள் வெளியாகியுள்ளன.