மேட்டுப்பாளையம் யானைகள் சிறப்பு நல வாழ்வு முகாமிற்கு, தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் இருந்து, யானைகளுக்கு அழைத்து செல்லப்பட்டன.

176

மேட்டுப்பாளையம் யானைகள் சிறப்பு நல வாழ்வு முகாமிற்கு, தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் இருந்து, யானைகளுக்கு அழைத்து செல்லப்பட்டன.
யானைகள் சிறப்பு நல வாழ்வு முகாம், மேட்டுப்பாளையம் அடுத்த தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படிகையில் தொடங்கியது. இந்த முகாமினை, இந்து அறநிலைத்துறை ஆணையர் வீரசண்முகமணி தொடங்கி வைத்தார். இதில் பங்கேற்பதற்காக பழனி முருகன் கோயிலில் இருந்து கஸ்தூரி என்ற யானை உள்பட தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் இருந்தும் யானைகள் லாரிகள் மூலம் அழைத்து வரப்பட்டன. யானைகளுக்கு சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து யானைகளுக்கு பழங்கள் வழங்கப்பட்டன. யானைகளுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட இந்த முகாம் தொடர்ந்து 30 நாட்களுக்கு நடைபெறும். இதில் தமிழக கோயில்களை சேர்ந்த 30 யானைகள் கலந்து கொண்டுள்ளதாக அறநிலையத்துறை ஆணையர் வீரசண்முகமணி தெரிவித்தார்.