கலிபோர்னியா வன உயிரியல் பூங்காவில் இரண்டு யானைக்குட்டிகள் மோதி விளையாடும் காட்சி சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

கலிபோர்னியா மாகாணம் சாண்டியாகோ நகரில் பிரபல வன உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு யானை ஒன்று, ஆண் குட்டியை ஈன்றது. இதேபோன்று மற்றொரு யானை கடந்த 2 மாதங்களுக்கு முன் பெண் குட்டி ஒன்றை ஈன்றது. தற்போது இந்த குட்டி யானைகள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு யானைக் குட்டிகளும், ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டு விளையாடும் காட்சி பூங்காவிற்கு வரும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த பூங்காவில் மொத்தம் 14 யானைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.