நோய் தாக்குதலில் அவதிப்பட்டு வரும் பெண் யானை சுந்தரி..!

284

நெல்லை கால்நடை மருத்துவமனையில் நோய் தாக்குதலில் அவதிப்பட்டு வரும் 82 வயதான பெண் யானை சுந்தரிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

நெல்லையில் முதுமை காரணமாக, சுந்தரி என்ற பெண் யானை, கண்பார்வை இழந்து, வாயில் புண்கள், காலில் வெடிப்பு உள்ளிட்ட நோய்களால் அவதிப்பட்டு வருகிறது. கால்நடை பன்முக அரசு மருத்துவமனையில் உள்ள யானையின் சிறுநீரகம், ரத்தம் போன்றவை மாதிரிகள் எடுக்கப்பட்டு, பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையிலும், யானை படுக்கக் கூட முடியாமல் அவதிப்பட்டு வருகிறது. தொடர் சிகிச்சை அளித்தாலும், மனிதர்களை முதுமையில் பராமரிப்பது போல, யானையை பராமரிக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.