யானை தந்தம் கடத்தல் – 3 பேர் கைது

153

சிதம்பரம் அருகே யானை தந்தத்தை கடத்திச் சென்ற மூன்றுப் பேரை போலீசார் கைது செய்தனர்.

சிதம்பரம் அடுத்த ஆணையம்பேட்டையில் போலீசார் வழக்கம் போல் வாகனக் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்திச் சோதனை மேற்கொண்ட போது, இரண்டு யானை தந்தம் கடத்தப்பட்டது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதையடுத்து, கடத்தலில் ஈடுபட்ட கடலூரைச் சேர்ந்த பிரகாஷ், கொளஞ்சி, சிலம்பரசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் புதுச்சத்திரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தலில் தொடர்புடைய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.