மின்வாரிய அதிகாரிகள், வாடிக்கையாளர்களின் ரூ.16 லட்சத்து 39 ஆயிரம் கையாடல்..!

165

மின்வாரிய அலுவலகத்தில் வாடிக்கையாளர்களின் மின்கட்டணத் தொகையான 16 லட்சத்தை கையாடல் செய்த 2 அதிகாரிகளை போலீசார் கைது செய்தனர்.

தமிழ்நாடு மின்வாரியம் ஓட்டேரி பிரிவு அலுவலகத்தில் வருவாய் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருபவர் வெங்கடேசன். மேலும் அதே அலுவலகத்தில் கணக்கீட்டு ஆய்வாளராக பணிபுரிபவர் சீனிவாசன். இவர்கள் இருவரும் வாடிக்கையாளர்கள் செலுத்திய மின்கட்டண தொகையான 16 லட்சத்து 39 ஆயிரத்தை கையாடல் செய்துள்ளனர். இவர்கள் மீது மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அரங்கேஸ்வரன் ஓட்டேரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், அதிகாரிகள் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். இதில் வாடிக்கையாளர்களின் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது உறுதிசெய்யப்பட்டதால், போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர்.