கிரிமினல் குற்றம் நிரூபிக்கப்பட்டால் தேர்தலில் நிற்க ஆயுட்கால தடை!

359

கிரிமினல் குற்றம் நிரூபிக்கப்பட்டால் தேர்தலில் நிற்க ஆயுட்கால தடை விதிப்பது தொடர்பாக, ஆய்வு செய்து வருவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டு, நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நபர்களுக்கு தேர்தலில் போட்டியிட நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்றும், அவர்கள் அரசியல் கட்சி நடத்தவோ, கட்சிப் பதவி வகிக்கவோ அனுமதிக்க கூடாது’ என்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில்,
கிரிமினல் குற்றவாளிகள் தங்கள் தண்டனை காலத்திற்குப் பின்னர் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கும் தற்போதைய நடைமுறை தொடர்ந்தால், குற்றவாளிகள் என சிறை சென்றவர்கள் எதிர்காலத்தில் எம்.பி.,க்களாகவும், அமைச்சர்களாகவும் வலம் வருவதற்கான வாய்ப்புள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதனையடுத்து கிரிமினல் குற்றம் நிரூபிக்கப்பட்டால் தேர்தலில் நிற்க ஆயுட்கால தடை விதிப்பது, அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானதா என ஆய்வு செய்து வருவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.