28-ம் தேதி உத்தரபிரதேசத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் தொடக்கம் – பிரதமர் மோடி

103

நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை பிரதமர் மோடி வருகிற 28-ந் தேதி உத்தரபிரதேசத்தில் தொடங்குகிறார்.

நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. மத்தியில் ஆளும் பாஜக -வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டு உள்ளது. இது தொடர்பாக பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.சமீபத்தில் நடைபெற்ற சில இடைத்தேர்தல்களில் பாஜக-வுக்கு பின்னடைவு ஏற்பட்டதால், நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கான உத்திகளை வகுக்கும் முயற்சியில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தற்போது ஈடுபட்டு உள்ளனர்.

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பாஜக-வின் பிரசாரத்தை பிரதமர் மோடி வருகிற 28-ந் தேதி தொடங்குகிறார். அன்று உத்தரபிரதேச மாநிலம் சந்த் கபீர்நகர் மாவட்டத்தில் உள்ள மகார் என்ற இடத்தில் நடைபெறும் பாஜக தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.