வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைப்பதற்கு உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மனு தாக்கல்..!

353

போலி வாக்காளர்களை தவிர்க்க வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்களை இணைப்பதற்கு அனுமதி வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மனு தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்தில் பெரும்பாலானோர் வீடு மற்றும் முகவரியை மாற்றும்போது வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்கம் செய்ய தவறி விடுவதால் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்தவாறு உள்ளது. இதனை பயன்படுத்தி கள்ள ஓட்டுக்கள் அதிகளவில் பதிவிடப்படுகின்றன. இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகளை தேர்தல் ஆணையம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக துவங்கியது. இந்த நிலையில், வாக்காளர்களின் ஆதார் எண்களை தேர்தல் ஆணையம் பெறுவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதனால் வாக்காளர்களின் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது இதற்கு மீண்டும் அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மனு தாக்கல் செய்துள்ளது