மாநிலங்களவை தேர்தலில் நோட்டா-வை பயன்படுத்தக் கூடாது – டெல்லி தலைமை தேர்தல் ஆணையம்

272

மாநிலங்களவை தேர்தலில் நோட்டா-வை பயன்படுத்தக்கூடாது என்று டெல்லி தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் உள்ளது போல, மாநிலங்களவை மற்றும் சட்டமன்ற மேலவை தேர்தலிலும், யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்பதை தெரிவிக்கும் நோட்டா-வை அறிமுகப்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத் காங்கிரஸ் சார்பில், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையில் மாநிலங்களவை தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.

இந்தநிலையில், மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் மாநிலங்களவை மற்றும் சட்டமன்ற மேலவை தேர்தலில் நோட்டாவை பயன்படுத்தக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஓட்டுச்சீட்டில் நோட்டா பிரிண்டிங் செய்யக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.