பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்து எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க வலியுறுத்தல்…

82

பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்து எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை அடுத்த மாதம் ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. ஆனால், உத்தரப்பிரதேசம், உத்தரக்காண்ட் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் தொடங்கி மார்ச் 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பட்ஜெட் அறிவிக்கப்படும் நலத்திட்டங்கள் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சிகள் கருதுகின்றன. எனவே, சட்டப்பேரவை தேர்தலுக்கு பின்னர் பட்ஜெட்டை தாக்கல் செய்யவேண்டும் என காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அவர்களின் கோரிக்கைக்கு மத்திய அரசு செவிசாய்க்காததால், குடியரசுத்தலைவர் மற்றும் தேர்தல் ஆணையத்தை சந்தித்து முறையிடப்பட்டது. இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கு மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.