பாகிஸ்தானில் 342 தொகுதிகளிலும் காலை 8 மணி முதல் விறுவிறு வாக்கு பதிவு..!

607

பாகிஸ்தானில் பொதுதேர்தல் நடைபெறுவதை யொட்டி, காலை 8மணி முதல் விறு விறுப்பாக வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

பாகிஸ்தான் முஸ்லீம் கட்சி, தெஹ்ரீக் இ இன்சாப் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகிய 3 பிரதான கட்சிகள் பாகிஸ்தான் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடுகின்றன. 272 தொகுதிகளில் மொத்தம் 3 ஆயிரத்து 459 பொது வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 10 தொகுதிகள் சிறுபான்மையினருக்கும், பெண்களுக்கு 60 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்தநிலையில், 342 நாடாளுமன்ற தொகுதிகளிலும் காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது.

வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்கு செலுத்தி வருகின்றனர். பதற்றமான வாக்கு சாவடிகளில், பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த பொதுத்தேர்தலில் இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியே வெற்றிப் பெற்று ஆட்சி அமைக்கும் என்று கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. தேர்லை யொட்டி, சுமார் 4 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.