3ஆம் கட்ட தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

268

3ஆம் கட்டமாக நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில், காலை11 மணி நிலவரப்படி, 15 மாநிலங்களிலும் சராசரியாக 11 புள்ளி 34 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

15 மாநிலங்களில் உள்ள 117 மக்களவை தொகுதிகளில் நடைபெற்று வரும் வாக்குப்பதிவு, இவிஎம்-களில் ஏற்பட்ட பழுது காரணமாக, கேரளா, பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள ஒரு சில இடங்களில் தாமதமாக தொடங்கியது. இதனிடையே, மக்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல், காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணைராணுவப்படை பாதுகாப்பில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பாஜக தேசியத்தலைவர் அமித்ஷா தனது மனைவி சோனல் ஷாவுடன் சென்று, அகமதாபாத்தில் உள்ள நரன்புரா மாவட்ட உதவி அலுவலகத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார். குஜராத் மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி, தனது மனைவி அஞ்சலியுடன் அனில்கயான் மந்திர் பள்ளியில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒடிசா மாநிலம் டைச்சர் என்ற இடத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், ஏரோடிரோம் அரசு பள்ளியில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். கேரள காங்கிரஸ் தலைவரும், திருவனந்தபுரம் காங்கிரஸ் வேட்பாளருமான சசிதரூர் நகரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். பாஜகவின் குன்னம் ராஜசேகரன், இடதுசாரிகளின் திவாகரனை எதிர்த்து சசிதரூர் போட்டியிடுகிறார் என்பது குறி்ப்பிடத்தக்கது. இதனிடையே, 3ஆம் கட்டமாக நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில், காலை11 மணி நிலவரப்படி, 15 மாநிலங்களிலும் சராசரியாக 11 புள்ளி 34 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.