கேரளா, குஜராத், கோவா – ஒரே கட்டமாக இன்று தேர்தல்

300

ஒடிசா, குஜராத், கோவா ஆகிய மாநிலங்களில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

ஒடிசாவில் உள்ள நூற்று நாற்பத்தேழு சட்டமன்ற தொகுதிகளில் இன்று நான்காம் கட்டமாக, நாற்பத்து இரண்டு தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குஜராத்தில், துரந்த்ரத், மணிவடார், உன்னா மற்றும் ஜாம்நகர் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் நாற்பத்து ஐந்து வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இங்குள்ள நான்கு தொகுதிகளில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் கட்சியிலிருந்து விலகி பிஜேபியில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். செவ்வாய்க்கிழமை ஒரே நேரத்தில் நடத்தப்பட வேண்டிய தலாலா சட்டமன்றத் தொகுதி தேர்தல், உச்சநீதி மன்றத்தால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

கோவாவில் உள்ள மூன்று மாநில சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. இரு தொகுதிகளில் பன்னிரெண்டு வேட்பாளர்களும், மூன்று சட்டமன்ற தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் பதினெட்டு வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். சீரோடா மாற்று மாண்ட்ரேம் தொகுதிகளில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் பதவி விலகல் காரணமாகவும், மாபுஸா தொகுதியில் பாஜக எம்.எல்.ஏ.வின் மரணத்தால் அம்மூன்று தொகுதிகளும் இன்று இடைத்தேர்தலை சந்திக்கின்றன.