அதிபர் தேர்தலில் நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி அமோக வெற்றி

214

உக்ரைனில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அரசியல் அனுபவம் இல்லாத நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி அமோக வெற்றிப்பெற்றார்.

உக்ரைன் நாட்டின் அதிபரான பெட்ரோ பொரஷென்கோவின் பதவி காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறதை முன்னிட்டு, அங்கு அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில், தமது அதிபர் பதவியை தக்கவைத்துக்கொள்ள மீண்டும் பெட்ரோ பொரஷென்கோ போட்டியிட்டார். இவரை எதிர்த்து அரசியலில் எந்தவித அனுபவமும் இல்லாத டி.வி. நகைச்சுவை நடிகரான ஜெலன்ஸ்கி களமிறங்கினார். இதில் புதிய மாற்றத்தை விரும்பிய உக்ரைன் மக்கள் ஜெலன்ஸ்கியை ஆதரித்தனர். 2 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில், 75 சதவீத வாக்குகள் வித்தியாத்தில் ஜெலன்ஸ்கி அமோக வெற்றிப்பெற்றார். இதனால் உக்ரைன் நாட்டின் புதிய அதிபராக, வருகின்ற மே மாதம் அவர் பதவியேற்க உள்ளார்.