வாக்காளர் பட்டியலில் சேர்க்க 3 லட்சம் பேர் விண்ணப்பம் – தேர்தல் அதிகாரி சத்யபிரபா சாஹூ

239

வாக்காளர் பட்டியலில் இடம்பெற மூன்று லட்சம் பேர் ஆன்லைன் மூலம் விண்ணபித்து இருப்பதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரபா சாஹூ தெரிவித்துள்ளார்.

மாற்றுத் திறனாளிகள் தன்னிச்சையாக சென்று வாக்களிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரபா சாஹூ, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். வாக்காளர் பட்டியலில் இடம் பெற முன்று லட்சம் பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து உள்ளதாக கூறினார்.