தேர்தல் அறிக்கை வெளியிட கெடு

65

அரசியல் கட்சிகள் மக்களவைத் தேர்தல் அறிக்கையை வெளியிட தேர்தல் ஆணையம் கெடு விதித்துள்ளது.

இதுதொடர்பாக, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு 48 மணி நேரம் முன்பாக எந்தக் கட்சியும் தேர்தல் அறிக்கையை வெளியிடக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் பிரிவு 126-ன் கீழ் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், வாக்குப்பதிவு ஒரு கட்டமாக நடைபெறுவதாக இருந்தாலும் பல கட்டங்களாக நடைபெறுவதாக இருந்தாலும் இந்த விதி பொருந்தும் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், இந்த விதிமுறை இனிவரும் தேர்தல்களின்போதும் அமல்படுத்தப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.