மேற்குவங்கம் உள்பட 4 மாநிலங்களில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு..!

58

மேற்கு வங்கம் உட்பட நான்கு மாநிலங்களில், மக்களவை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணைய குழுவினர் ஆய்வு நடத்த உள்ளனர்.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏப்ரல் 11ல் தொடங்கி மே மாதம் 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதனால் தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும் பணிகளில் தேர்தல் ஆணையம் முழுவீச்சில் இறங்கியுள்ளது. இந்நிலையில் மேற்குவங்கம், திரிபுரா, மணிப்பூர், அசாம் ஆகிய 4 மாநிலங்களில் துணை தேர்தல் ஆணையர், சுதீப் ஜெயின் தலைமையிலான குழு நாளை ஆய்வு செய்ய உள்ளது. வாக்குசாவடிகளில் ஏற்படுத்தப்பட உள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நாளை முதல் 5 நாட்களுக்கு ஆய்வு செய்ய உள்ளனர். இதனிடையே மேற்கு வங்கத்தில், தற்போதுள்ள நிலைமை குறித்து அறிக்கை அளிக்கும்படி, அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணைய குழு உத்தரவிட்டுள்ளது