எகிப்தில் அரசு தலைமை வழக்கறிஞர் கொலை வழக்கில் 28 பேருக்கு மரண தண்டனை !

340

எகிப்தில் அரசு தலைமை வழக்கறிஞர் கொலை வழக்கில் 28 பேருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
எகிப்தில் கடந்த 2015-ம் ஆண்டு அரசு மூத்த வழக்கறிஞரான ஹிஷாம் பரக்கத் எனபவர் கார் வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார்.. இந்த தாக்குதலில் தொடர்புடைய ஹமாஸ் தீவிரவாத குழுக்களைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர்.இது தொடர்பான வழக்கு விசாரணை அந்நாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இவ்வழக்கின் இறுதி விசாரணை கடந்த ஜூன் மாதம் நிறைவடைந்த நிலையில், 28 பேருக்கு மரண தண்டனையும், 15 பேருக்கு தலா 25 ஆண்டு சிறைத்தண்டனையும் விதித்து, நீதிமன்றம் பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையானது, எகிப்து நாட்டின் சட்டப்படி அரசாணைகளை வெளியிடும் தலைமை முப்திக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தண்டனைக்கு தலைமை முப்தி ஒப்புதல் அளித்ததையடுத்து கெய்ரோ நீதிமன்றம் தீர்ப்பை உறுதி செய்ததுள்ளது.இந்த தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் மேல்முறையீடு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.