சென்னை எழும்பூரில் தமிழர் தந்தை ஆதித்தனார் சிலை அகற்றப்பட்ட அதே இடத்தில் மீண்டும் நிறுவப்பட்டுள்ளது.

293

சென்னை எழும்பூரில் தமிழர் தந்தை ஆதித்தனார் சிலை அகற்றப்பட்ட அதே இடத்தில் மீண்டும் நிறுவப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூரில் அகற்றப்பட்ட ஆதித்தனார் சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவ வேண்டும் என நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு, பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்புகளைச்சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வந்தனர். இதனையடுத்து, சிலை மீண்டும் அதே இடத்தில் நிறுவப்படும் என முதலமைச்சர் உறுதியளித்திருந்தார். மேலும், சிலையை நிறுவுவதற்கான பணிகளை விரைந்து முடிக்குமாறும் சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, சிலை அமைந்திருந்த இடத்தில் சிக்னல் அமைக்கும் பணிகள் மற்றும் சிலையைச் சுற்றி புல் வெளி போன்ற அமைப்பு ஏற்படுத்தும் பணிகள் துரிதமாக நடைபெற்று நிறைவடைந்தன. இதனைத்தொடர்ந்து, நேற்று மீண்டும் ஆதித்தனார் சிலை அதே இடத்தில் நிறுவப்பட்டது. இந்த நிலையில் வரும் 27ஆம் தேதி ஆதித்தனார் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.