சுதந்திர தினத்தையொட்டி, சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

242

சுதந்திர தினத்தையொட்டி, சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, சென்னை சென்டிரல் ரயில் நிலையம் முழுவதும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சென்டிரல் ரெயில் நிலையத்தில் வாகனம் நிறுத்தும் இடம், பார்சல்கள் வைக்கும் இடம், பயணிகள் பயன்படுத்தும் கழிவறைகள், பிளாட்பாரங்கள், பயணிகள் தங்கும் அறை உள்ளிட்ட பகுதிகளில் ரயில்வே போலீஸார் தீவிர சோதனை செய்து வருகின்றனர்.
வடமாநிலங்களுக்கு புறப்படும் ரெயில்களில் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவியுடனும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர். மேலும், சென்டிரல் ரெயில் நிலையத்தின் நுழைவுவாயில் பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நுழைவுவாயில் பகுதியில் ஸ்கேனர் கருவி மூலம், பயணிகள் கொண்டு வரும் பொருட்கள் சோதனைக்கு செய்த பிறகே உள்ளே கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகின்றன.
இதேபோன்று, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தாம்பரம், குரோம்பேட்டை, மாம்பலம் ஆகிய ரயில் நிலையங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.