சத்துணவு முட்டை டெண்டர் 20ம் தேதி வரை நிறுத்தி வைப்பு..!

330

சத்துணைவு முட்டைக்காக தமிழக அரசு வெளியிட்டுள்ள டெண்டரை 20ம் தேதி வரை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சத்துணவு முட்டை கொள்முதலில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, குற்றச்சாட்டுக்கு ஆளான நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து அரசுப் பள்ளிகளில் சத்துணவு திட்டத்தின்கீழ் நாளொன்றுக்கு 48 லட்சம் முட்டைகள் விநியோகிக்க ஒப்பந்தப் புள்ளிக் கோரப்பட்டது. இதுதொடர்பான அரசாணையில், வெளிமாநில கோழி பண்ணைகள் பங்குபெறுவதை தடை செய்தும், தமிழகத்தை 6 மண்டலங்களாக பிரித்து, மண்டல வாரியாக ஒப்பந்த புள்ளி சமர்பிக்கவும் தெரிவிக்கப்பட்டது.

இதனால், தனியார் கோழி பண்ணைகள் பாதிக்கப்படுவதாக கூறி கோழி பண்ணைகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக பதில் அளிக்க, 14ம் தேதி வரை தமிழக அரசு அவகாசம் கேட்டது. இதனால் வழக்கை விசாரித்த நீதிபதிகள், சத்துணவு முட்டை கொள்முதல் செய்வதற்கான டெண்டரை 20ம் தேதி வரை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டது. சத்துணவு முட்டை கொள்முதல் செய்வதற்கான டெண்டர் இன்று முடிவு செய்யப்பட இருந்த நிலையில் விசாரணை 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

,