சத்துணவுக் கூடங்களுக்கு முட்டை வழங்குவதற்காக சமர்பிக்கப்பட்ட அனைத்து டெண்டர் விண்ணப்பங்களும் நிராகரிப்பு

751

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் சத்துணவுக் கூடங்களுக்கு முட்டை வழங்குவதற்காக சமர்பிக்கப்பட்ட அனைத்து டெண்டர் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டன.

தமிழகத்தில் உள்ள குழந்தைகள் மையங்கள், அரசு பள்ளிகளில் உள்ள சத்துணவுக் கூடங்களுக்கு அடுத்த ஓராண்டுக்கு முட்டை வழங்குவதற்குத் தகுதியான நிறுவனங்களிடம் இருந்து டெண்டர் கோரப்பட்டது. இதில் வருமான வரித்துறை சோதனைக்கு உள்ளான கிறிஸ்டி குழுமத்துக்கு சொந்தமான கிசான், சுவர்ணபூமி, நேச்சுரல்ஸ் ஆகிய 3 நிறுவனங்கள் உட்பட 6 நிறுவனங்கள் டெண்டருக்கு விண்ணப்பித்திருந்தன. இந்த நிலையில், நேற்று சென்னை தரமணியில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகத்தில் டெண்டருக்கான விண்ணப்பங்கள் பரிசீலனை நடைபெற்றது. அப்போது, 6 நிறுவனங்களும், தாங்கள் சமர்பித்த டெண்டர் படிவத்தில் தாய்சேய் முத்திரையை சேர்க்கவில்லை எனக்கூறி அவற்றை அதிகாரிகள் நிராகரித்தனர்.