பெரும்பான்மை நிரூபிக்க எடப்பாடி அணிக்கு 117 உறுப்பினர்கள் ஆதரவு தேவை..!

927

பெரும்பான்மையை நிரூபிக்க, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு 117 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், சட்டசபையில் கட்சிகளின் பலத்தை தற்போது பார்ப்போம்.
டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர், அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி உள்ளனர்.
இந்தநிலையில், 234 உறுப்பினர்களை கொண்ட தமிழக சட்டசபையில், எடப்பாடி அணிக்கு 116 பேரின் ஆதரவு உள்ளது.
தினகரன் அணிக்கு 19 எம்எல்ஏக்கள் ஆதரவாக உள்ளனர்.
எதிர்கட்சியான தி.மு.க.வுக்கு 89 உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சிக்கு 8 உறுப்பினர்களும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு உறுப்பினரும் உள்ளனர்.
பெரும்பான்மை நிரூபிக்க எடப்பாடி அணிக்கு 117 உறுப்பினர்கள் ஆதரவை தேவை என்ற நிலை உள்ளது.