எடப்பாடி அருகே கட்டடம் ஒன்றின் மேல்தளம் சரிந்து செல்போன் கடை மீது விழுந்ததில் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.

303

எடப்பாடி அருகே கட்டடம் ஒன்றின் மேல்தளம் சரிந்து செல்போன் கடை மீது விழுந்ததில் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வெள்ளாண்டிவலசு பகுதியில் சரோஜா என்பவருக்கு சொந்தமான வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டின் மேல்தளம் திடீரென சரிந்து, வீட்டின் அருகில் இருந்த செல்போன் கடை மீது விழுந்தது. இதில் கடையில் இருந்த சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் முற்றிலுமாக சேதமடைந்தன. இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், கட்டடம் இடிந்தது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.