எடப்பாடி அணியுடன் இணைய வேண்டாம் என்பது தொண்டர்களின் கருத்தாக இருப்பதால், அதுபற்றி ஆலோசிக்கப்படும் என்று ஓபிஎஸ் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செம்மலை தெரிவித்துள்ளார்.

291

எடப்பாடி அணியுடன் இணைய வேண்டாம் என்பது தொண்டர்களின் கருத்தாக இருப்பதால், அதுபற்றி ஆலோசிக்கப்படும் என்று ஓபிஎஸ் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செம்மலை தெரிவித்துள்ளார்.
அதிமுகவை இணைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை தொடங்கி விட்டதாக கருதப்பட்ட நிலையில், முடிவு எடுப்பதில் இழுபறி தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்தநிலையில், சேலத்தில் ஓபிஎஸ் அணி சார்பில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் செம்மலை தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் எடப்பாடி அணியுடன் இணைவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செம்மலை, எடப்பாடி அணியுடன் இணைய வேண்டாம் என்று நிர்வாகிகளும், தொண்டர்களும் கருதுவதாக கூறினார். தாங்கள் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற எடப்பாடி அணி முன்வரவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.