புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி..!

134

மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை நூறு ஏரிகளில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதலமைச்சர் பழனிசாமி, பல்வேறு துறைகளின் சார்பில் முடிவுற்ற திட்டப்பணிகளைத் திறந்து வைத்தார். பல்வேறு துறைகளின் சார்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினிகளையும் வழங்கினார். இந்த விழாவில் திமுகவைச் சேர்ந்த சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்ஆர்பார்த்திபனும் கலந்து கொண்டார். இந்த விழாவில் பேசிய முதலமைச்சர், தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளில் 76 அரசு கல்லூரிகள் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். வெள்ளக் காலங்களில் மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை நூறு ஏரிகளில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.