நதிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்ப்பாயம் தேவையில்லை-முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!

460
palanisamy

நதிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்ப்பாயம் தேவையில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்காரிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ள அவர், இரண்டு மாநில நதிநீர் பிரச்சினையை தீர்க்க 2002ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்த சட்டம் போதுமானது என்று குறிப்பிடுள்ளார்.
நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண, சட்டத்தில் மேலும் ஒரு திருத்தம் கொண்டு வர வேண்டாம் என்று முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.
காவிரி நதிநீர் தீர்ப்பாயம் செயல்படுவதில் எவ்வித குறுக்கீடும் கூடாது என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நதிநீர் தீர்ப்பாயத்துக்கு காவிரி பிரச்சனையை மாற்றக்கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ள அவர்,
மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நதிநீர் திருத்த சட்ட மசோதாவை திரும்பபெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளை போன்று நதிநீர் வழக்குகளை அணுகக் கூடாது என்றும்,
உச்சநீதிமன்ற உத்தரவின் படியே காவிரி நதிநீர் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, உச்சநீதிமன்றத்தின் அனுமதி இன்றி காவிரி வழக்குகளை புதிய அமைப்புக்கு மாற்றக்கூடாது என்று அந்தக் கடிதத்தில் முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.