எடப்பாடி அருகே கொசு மருந்து அடித்தப்போது சுகாதார ஆய்வாளர் மீது பைக் மோதி விபத்து!

580

எடப்பாடி அருகே கொசு மருந்து அடித்தப்போது சாலையில் நின்றுக் கொண்டிருந்த சுகாதார ஆய்வாளர் மீது இருசக்கர வாகனம் மோதியது பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலை கட்டுபடுத்த தேவையான நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது. எடப்பாடி அரசு மருத்துவமனையில் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில், சேலம் பிரதான சாலையில், சுகாதாரத்துறை ஊழியர்கள் கொசு மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புகைமூட்டம் மேற்பட்டதால் அவ்வழியாக சென்ற இருசக்கர வாகனம் ஒன்று, சாலையின் நடுவே நின்று ஊழியர்களுக்கு ஆலோசனை வழங்கிய சுகாதார ஆய்வாளர் மீது மோதியது. இந்த விபத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்த தம்பதியினரை மீட்ட அதிகாரிகள், மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.