பெரும்பான்மையை இழந்த எடப்பாடி பழனிச்சாமி அரசு பதவியில் நீடிப்பது சட்டத்துக்கு விரோதமானது – எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின்!

380

பெரும்பான்மையை இழந்த எடப்பாடி பழனிச்சாமி அரசு பதவியில் நீடிப்பது சட்டத்துக்கு விரோதமானது என எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மைனாரிட்டி அதிமுக அரசு தயாரித்த உரையை ஆளுநர் படிப்பது கண்டிக்கத்தக்கது என்று கூறினார். எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு 111 சட்டப்பேரவை உறுப்பினர்கள் மட்டுமே ஆதரவு உள்ளதாக தேர்தல் ஆணையமே தெரிவித்துள்ளதை மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டினார். எனவே, எடப்பாடி பழனிச்சாமி அரசு உடனடியாக பதவியிலிருந்து விலகவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.