முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிமுக எம்.பிக்களை இன்று மதியம் 2.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் சந்தித்து ஆலோசனை.

284

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிமுக எம்.பிக்களை இன்று மதியம் 2.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்த இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் வட்டம், புத்திரன்கோட்டைக் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி, முருகன் மற்றும் சுதர்சனம் ஆகிய மூன்று பேரும் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் மீது மரம் முறிந்து விழுந்ததில், சுப்பிரமணி, முருகன் ஆகிய இரண்டுப் பேரும் உயிரிழந்தனர். சுதர்சனம் பலத்தக் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இதில் உயிரிழந்த சுப்பிரமணி, முருகன் ஆகியோர் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாயும், படுகாயமடைந்த சுதர்சனத்திற்கு 50,000 ரூபாயும் வழங்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையின் இனறைய கூட்டத்தில் அவர் இதனைக் கூறினார்.
இதனிடையே, குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக, அதிமுக எம்.பிக்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மதியம் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சரின் அலுவலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது.