வேலூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா இன்று கோலாகலமாக நடைபெற உள்ளது.

317

வேலூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா இன்று கோலாகலமாக நடைபெற உள்ளது.
மறைந்த தமிழக முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி வேலூர் மாவட்டத்தில்
இன்று மாலை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தொடங்குகிறது. இதற்காக வேலூர் கோட்டை மைதானத்தில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. இறுதி கட்ட பணிகள் அனைத்தும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். விழாவில் பங்கேற்கும் முதல்-அமைச்சர் பழனிசாமி பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்குகிறார். மேலும் அவர் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.