முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக நெசவாளர்களுக்கு கைத்தறி தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

220

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக நெசவாளர்களுக்கு கைத்தறி தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,நாட்டில் கைத்தறி தொழில் ஆற்றி வரும் பங்களிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆகஸ்ட் 7 -ம் தேதி ஆண்டுதோறும் தேசிய கைத்தறி நாள் கொண்டாடப்படுவதாக கூறியுள்ளார்.
கைத்தறி நெசவாளர்களுக்கு பசுமை வீடுகள் திட்டம், விலையில்லா மின்சாரம் வழங்குதல், நலவாழ்வு மற்றும் ஆயுள் காப்பீடு திட்டம் உள்ளிட்டடவை தமிழக அரசு சார்பில் வழங்கப்படுவதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய தொழிலில் ஈடுபடுபவர்களின் வாழ்வு வளம் பெறும் வகையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து சீரிய முறையில் நடைமுறைப்படுத்த வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தர மக்களும் வாரத்திற்கு ஒருமுறையாவது கைத்தறி ஆடைகளை உடுத்தி நெசவாளர்களின் வாழ்வு உயர ஆதரவு அளிக்குமாறும் எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.