சுயஉதவிக் குழுக்களுக்கு ஆண்டுதோறும், 18 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமை..!

223

சுயஉதவிக் குழுக்களுக்கு ஆண்டுதோறும், 18 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி சார்பாக 36-வது ஆண்டு விழா மற்றும் விருது வழங்கும் விழா சென்னை அடையாறில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது, தமிழக அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதியுதவி செய்து வரும் நபார்டு வங்கிக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், சுய உதவிக் குழுக்களுக்கு ஆண்டுதோறும், 18 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி வழங்கி வருவதையும், இதில் வங்கிகளின் பங்களிப்பு 6 ஆயிரம் கோடி மட்டுமே உள்ளதாகவும் சுட்டிக் காட்டினார். வருங்காலங்களில் இந்தப் பங்களிப்பை உயர்த்த வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.