இந்தியாவை புதிய யுகத்துக்கு அழைத்து செல்வார் பிரதமர் : முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி புகழாரம் …!

358

இந்தியாவை புதிய யுகத்துக்கு அழைத்து செல்லும் வகையில் பிரதமர் மோடி அயராது உழைத்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி புகழாரம் சூட்டியுள்ளார்.
தினத்தந்தி பவளவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், ஜனநாயகத்தின் நான்காவது தூணாக பத்திரிக்கை திகழ்வதாக புகழாரம் சூட்டினார். அரசும், பத்திரிக்கையும் வண்டியின் இருசக்கரமாக இருப்பதாக கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மக்களின் நாடி நரம்புகளை பிடித்து பார்த்து அவர்களுக்கு செய்தியை கொண்டு சேர்ப்பது பத்திரிக்கை என்று குறிப்பிட்டார். ஜனநாயகத்தின் நான்காவது தூணாக பத்திரிக்கை விளங்குவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.