மக்கள் நலனுக்காகவே மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படுவதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கருத்து ..!

305

தமிழக மக்களின் நலனுக்காகவே மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படுவதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளையொட்டி சென்னை தண்டையார்பேட்டையில் ஏழாயிரத்து, 70 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அரசுக்கு தமிழக அரசு அடி பணிந்துள்ளது என்பது தவறான கருத்து என தெரிவித்தார். தமிழக மக்களின் நலனுக்காகவே மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படுகிறோம் எனவும் அவர் கூறினார்.