அம்மா நடமாடும் மருத்துவமனை வாகனம் – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்..!

334

ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அம்மா நடமாடும் மருத்துவமனை வாகனத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கிவைத்தார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் வரும் 24 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அம்மா நடமாடும் மருத்துவமனை வாகனத்தை
தமிழகம் முழுவதும் தொடங்க தமிழக அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி,
சென்னை கிரீன்வேஸ்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அம்மா நடமாடும் மருத்துவமனை வாகனத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். இந்த வாகனத்தில் ரத்த பரிசோதனை, ஈ.சி.ஜி உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடமாடும் வாகனத்தில் இரண்டு மருத்துவர்கள், மூன்று செவிலியர்கள் பணியில் இருப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி இந்த வாகனத்தை பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.