சென்னையில் முதலமைச்சர் பழனிச்சாமியுடன் இன்று மு.க.ஸ்டாலின் சந்திப்பு..!

678

சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சந்திக்கிறார்.
பேருந்து கட்டணம் சீரமைப்பது தொடர்பாக, திமுக சார்பில் அமைக்கப்பட்ட 5 பேர் கொண்ட குழுவினர், 62 பக்க அறிக்கையை மு.க.ஸ்டாலினிடம் அளித்துள்ளனர். இதனையடுத்து, போக்குவரத்து கழக மேம்பாடு தொடர்பான திமுக ஆய்வறிக்கையை முதலமைச்சரிடம் ஒப்படைக்க, திமுக சார்பில் நேரம் கேட்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, முதலமைச்சரை சந்திக்க, இன்று 12 மணிக்கு திமுகவுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று 12 மணிக்கு நேரில் சந்தித்து, போக்குவரத்து கழக மேம்பாடு குறித்த திமுக அறிக்கையை மு.க.ஸ்டாலின் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.