கல்வித்துறையில் நாட்டிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது – முதலமைச்சர் பழனிச்சாமி.

282

கல்வித்துறையில் நாட்டிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கூட்டுக்குடிநீர் திட்டம் உள்ளிட்டவற்றை தொடங்கி வைப்பதற்காக, விமானம் மூலம் மதுரை சென்றார். அங்கிருந்து கார் மூலம் கோயில் பட்டிக்கு புறப்பட்ட முதலமைச்சருக்கு, திருமங்கலத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழகம் கல்வித்துறையில் முன்னோடித் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாகவும், இதன் காரணமாக கல்வித்துறையில் நாட்டிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது என்றும் பெருமிதம் தெரிவித்தார்.