தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து..!

375

இன்று பிறந்தநாள் கொண்டாடும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று தன்னுடைய 78 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆளுநருக்கு பூங்கொத்துடன் வாழ்த்துக்கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில், ஆளுநருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவதில் தான் பெரு மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார்.
ஆளுநர் பல ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்து நாட்டுக்கும், மக்களுக்கும் சேவையாற்றிட வேண்டும் என அவர் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சரின் இந்த வாழ்த்துக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நன்றி தெரிவித்து கொண்டார்.