டெங்கு கொசு உற்பத்தி ஆகாமல் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

511

டெங்கு கொசு உற்பத்தி ஆகாமல் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
புதுக்கோட்டையில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய அவர், டெங்கு காய்ச்சலை தடுக்க தமிழக அரசு போர்கால நடவடிக்கைகளை எடுத்து வருவதாக குறிப்பிட்டார். எதிர்க்கட்சிகள் டெங்கு காய்ச்சலை கொண்டு அரசியல் செய்வதாக குற்றம் சாட்டிய முதலமைச்சர், டெங்குவை கட்டுபடுத்த மக்களின் உதவி வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், தமிழகத்தில் எத்தனை தேர்தல் வந்தாலும் தங்கள் ஆட்சி தொடரும் என்று கூறினார்.