ரூ.15 கோடி மதிப்பீட்டில் இயற்கை மருத்துவ கல்லூரி கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

239

அரசு சித்த மருத்துவமனை வளாகத்தில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
சென்னை அண்ணாநகரில் உள்ள அரசு சித்த மருத்துவமனை வளாகத்தில், அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ மேற்படிப்பு கல்லூரிக்கான கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளன. 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டடப்பட்டுள்ள இந்த கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் ஜெயக்குமார், உடுமலை ராதகிருஷ்ணன், செல்லூர் ராஜூ உள்ளிட்ட அமைச்சர்களும் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து இயற்கை மருத்துவ கல்லூரியில் நடைபெறும் ஆரோக்கிய கண்காட்சியை தொடங்கி வைத்த முதல்வர் பழனிசாமி மாணவர்களின் யோகா நிகழ்ச்சியையும் ஆர்வத்துடன் பார்வையிட்டார். இதனிடையே விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி எடையை குறைக்க யோகா சிறந்த வழி என்று தெரிவித்தார்.