காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை.

781

காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் நீர் ஒழுங்காற்று குழுவை உடனடியாக அமைக்க பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
ராணுவ தளவாட கண்காட்சியில் பங்கேற்க சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை மனுவை அளித்தார்.
அதில், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் அம்சங்களை இணைத்தே உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜூன் 1 ஆம் தேதி முதல் டெல்டா மாவட்ட விவசாயிகள் தங்களது பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.