துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக மூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை.

182

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக மூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ, ராஜலெட்சுமி, டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உளிட்டோர் பங்கேற்றுள்ளனர். துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அமைச்சர்களிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்து வருவதாக தெரிகிறது. தூத்துக்குடியில் பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்களை ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் பழனிசாமியிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினால் அதனை எதிர்கொள்வது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.